×

செட்டிப்பட்டு படுகை அணையில் மண் அரிப்பால் ஆலமரத்துக்கு ஆபத்து-நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திருக்கனூர் : திருக்கனூர் அருகே செட்டிப்பட்டு சங்கராபரணி ஆற்றின் குறுக்கே படுகை அணை கட்டப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக படுகை அணையில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து விவசாய நிலங்களில் பயிர்கள் செய்ய ஏதுவாக உள்ளது. இதன் காரணமாக விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்போது சுற்றியுள்ள விவசாய நிலங்களில் நெல் உள்ளிட்ட பயிர்கள் நடவுப்பணி நடந்து வருகிறது. இதனால் அந்த பகுதி பறவைகள் நிறைந்து ரம்மியமாக காட்சியளிக்கிறது.செட்டிப்பட்டு அணையிலிருந்து கூனிச்சம்பட்டு படுகை அணை வரை கரை அமைத்து சாலை போடப்பட்டது. அந்த சாலை தற்போது, துண்டிப்பு ஏற்பட்டு சேதம் ஏற்பட்டுள்ளது. மேலும் செட்டிப்பட்டு படுகை அணையின் அருகே உள்ள பெரிய ஆலமரத்தின் அடியில் மண் அரிப்பு ஏற்பட்டு ஆலமரம் பாதி அளவு அந்தரத்தில் நிற்பது போல் உள்ளது. இந்த மரம் சரிந்து விழுவதற்குள் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனடியாக இதனை சரி செய்ய வேண்டும். மேலும், படுகை அணையின் இரு கரைகளையும் பலப்படுத்த வேண்டும் என அப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்….

The post செட்டிப்பட்டு படுகை அணையில் மண் அரிப்பால் ஆலமரத்துக்கு ஆபத்து-நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Settatta Basin Dam ,Tirukanur ,Shankaraparani River ,Padugai ,Settpattu Padugai dam ,Dinakaran ,
× RELATED திருக்கனூர் அருகே கஞ்சா செடிகளை பயிரிட்டு விற்ற சிறுவன் உள்பட 5 பேர் கைது